செய்திகள்
ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி

முதல் பந்தில் டக்அவுட்: ஸ்மித்திடம் முதல் இடத்தை இழந்தார் விராட் கோலி

Published On 2019-09-03 09:39 GMT   |   Update On 2019-09-03 09:39 GMT
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் ஸ்மித்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன ஸ்டீவ் ஸ்மித் ஓராண்டு தடைக்குப்பின் ஆஷஸ் தொடரில் களம் இறங்கினார். முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். இதனால் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முன்னேறி விராட் கோலியை நெருங்கினார்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சிலும், 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சிலும் அரைசதம் அடித்ததால் விராட் கோலி முதல் இடத்தில் நீடித்தார்.

ஆனால், 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் முதல் பந்திலேயே டக்அவுட் ஆனதால் விராட் கோலிக்கு சறுக்கல் ஏற்பட்டது. ஸ்மித் 904 புள்ளிகள் பெற்று ஒரு புள்ளி வித்தியாசத்தில் முதல் இடத்தை பிடித்தார். விராட் கோலி 903 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு பின்தங்கினார்.

2-வது இன்னிங்சில் டக்அவுட் ஆகாமல் இருந்திருந்தால் முதல் இடத்தை தக்கவைத்திருக்கலாம். ஸ்மித் நாளை ஓல்டு டிராபோர்டில் தொடங்கும் 4-வது டெஸ்டில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 878 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், புஜாரா 825 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், நியூசிலாந்தின் ஹென்ரி நிக்கோல்ஸ் 749 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். ரகானே 725 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார்.
Tags:    

Similar News