செய்திகள்
அரை சதம் கடந்த நிலையில் இந்திய அணி வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் - இந்திய அணி முன்னிலை

Published On 2019-09-01 22:51 GMT   |   Update On 2019-09-01 22:51 GMT
வெஸ்ட் அணிகு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 468 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
கிங்ஸ்டன்:

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து  முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் குவித்தது.

இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய விஹாரி சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். விஹாரி 111 (225) குவித்த நிலையில் ஹோல்டர் பந்தில் கேட்ச் ஆனார். மேலும் இந்திய அணியில் அதிகபட்சமாக  விராட் கோலி 76 ரன்களும், இஷாந்த் சர்மா 57 ரன்களும், மயங்க் அகர்வால் 55 ரன்களும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஜாசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளும், ரகீம் கார்ன்வால் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3-வது நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஹெட்மயர் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா ஹாட்ரிக் விக்கெட் உட்பட 6 விக்கெட்டுகளை சாய்த்தார். மேலும் முகமது ஷமி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு பாலோ-ஆனை வழங்காமல் 299 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. அணியின் 4.6வது ஓவரில் மயங்க் அகர்வால் 4 ரன்களிலும், ராகுல் 6 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து ஆடிய புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  இவருடன் இணை கொடுக்க வந்த கோலி வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரோஜ் வீசிய பந்தில் அவுட்டானார்.  புஜாரா 27 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதனை தொடர்ந்து விளையாடிய ரஹானே இந்திய அணியின் ரன் விகிதம் உயர்வதற்கு காரணமாக இருந்தார். இவருடன் ஜோடி சேர்ந்த விகாரி இணை இருவரும் அரை சதத்தை பூர்த்தி செய்தனர்.  இறுதியில் 54.4 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட் எடுத்து 168 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது.  இந்திய அணி தரப்பில் ரஹானே (64), விகாரி (53) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.  

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஜ் 3 விக்கெட்களும்,     ஹோல்டர் ஒரு விகெட்டும் எடுத்தனர்.



இதனை தொடர்ந்து 468 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது.  ஜான் கேம்ப்பெல் மற்றும் ப்ராத்வெயிட் களம் இறங்கினர். சர்மா பந்து வீச்சில் ஆட்டத்தின் 2.3 வது ஓவரில் பிராத்வெயிட் 3 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து ஜான் கேம்ப்பெல் 16 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஆட்ட நேர முடிவில் 13 ஓவர்களை சந்தித்து 2 விக்கெட் இழந்து வெஸ்ட் இண்டீஸ் 45 ரன்கள் எடுத்தது.  ஆட்ட முடிவில் இந்திய அணி 423 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்திய அணி தரப்பில் சமி, சர்மா இருவரும் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.  
Tags:    

Similar News