செய்திகள்
செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன்- காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் செரீனா

Published On 2019-08-31 10:12 GMT   |   Update On 2019-08-31 10:12 GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
நியூயார்க்:

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தொடர்ந்து வெற்றிகளை குவித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார்.

அவ்வகையில் நேற்று நள்ளிரவில் நடந்த மூன்றாம் சுற்று ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா முசோவாவை எதிர்கொண்ட செரீனா, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்றார். இதன்மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அவர் முன்னேறினார். காலிறுதிக்கு முந்தைய சற்றில் அவர் குரோஷிய வீராங்கனை பெட்ரா மேட்ரிக்கை எதிர்கொள்ள உள்ளார்.

இதேபோல் பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியன் ஆஷ்லீ பார்ட்டி(ஆஸ்திரேலியா),  பிளிஸ்கோவா(செக் குடியரசு), எலினா சுவிட்லோனா (உக்ரைன்), ஜோஹன்னா கோன்டா (பிரிட்டன்), வாங் கியாங் (சீனா), மேசன் கீஸ் (அமெரிக்கா) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

அமெரிக்க ஓபனில் செரீனா 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மொத்தம் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News