செய்திகள்
சச்சின் டெண்டுல்கர்

‘Fit India' இயக்கம் -அடுத்தடுத்த அவதாரங்களை வீடியோவாக வெளியிடும் சச்சின்...

Published On 2019-08-31 05:46 GMT   |   Update On 2019-08-31 05:46 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் 'Fit India' இயக்கத்தை ஆதரிக்கும் விதமாக தான் பங்கேற்ற விளையாட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
புது டெல்லி:

கடந்த 29ம் தேதி தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி ‘Fit India' எனும் இயக்கத்தை துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தலைமையில் 28 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.

விளையாட்டின் முக்கியத்துவம், ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த  ‘Fit India' இயக்கம் தொடங்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார். இதனை வரவேற்கும் விதமாக பல்வேறு விளையாட்டு வீரர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.



இந்நிலையில் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஜாம்பவானாக கருதப்படுபவருமான சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில், #SportPlayingNation, #FitIndiaMovement எனும் ஹேஷ்டாகுகள் மூலம், தான் விளையாடும் இதர விளையாட்டுகளின் வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்.



முன்னதாக கடந்த 29ம் தேதி நண்பர்களுடன் டென்னிஸ் விளையாடும் வீடியோவினை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று கோல்ஃப் எனும் விளையாட்டிற்காக அவர் பயிற்சி பெறும் வீடியோவினை , ‘மற்றொரு விளையாட்டு, ஆனால் எல்லா வகையிலும் ஒரு சிறப்பு நாள்! வில்லிங்டன் கோல்ஃப் மைதானத்தில் எனது முதல் ஆட்டம்’ எனும் கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோக்கள் முன்னணி வீரர்கள் மத்தியிலும், சச்சினின் ரசிகர்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. சிலர், ‘லெஜெண்ட் ஜெஜெண்ட் தான்’ என கமெண்டுகளில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.





Tags:    

Similar News