செய்திகள்
ரோஜர் பெடரர்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இவான்சை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார் பெடரர்

Published On 2019-08-31 02:31 GMT   |   Update On 2019-08-31 02:52 GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸில் முன்னணி வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரிட்டனின் டேனியல் இவான்சை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
நியூயார்க்:

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர் பிரிட்டன் வீரரான டேனியல் இவான்சை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே பெடரர் சிறப்பாக ஆடினார். அவர் 6-2, 6-2,6-1 என்ற நேர்செட்களில் டேனியல் இவான்சை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி 20 நிமிடங்கள் நடந்தது. இந்த வெற்றியின் மூலம் ரோஜர் பெடரர் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
Tags:    

Similar News