செய்திகள்
ஷிவம் டுபே

‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

Published On 2019-08-29 14:50 GMT   |   Update On 2019-08-29 14:50 GMT
தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 69 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. திருவனந்தபுரத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் ஷுப்மான் கில், கெய்க்வாட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கெய்க்வாட் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தார். ஷுப்மான் கில் 46 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

அடுத்து வந்த அன்மோல்ப்ரீத் (29), மணிஷ் பாண்டே (39), இஷான் கிஷன் (37) சீரான இடைவெளியில் வெளியேறினர். அடுத்து வந்த ஷிவம் டுபே ஆட்டமிழக்காமல் 60 பந்தில் 79 ரன்களும், அக்சார் பட்டேல் 36 பந்தில் 60 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்தது.

பின்னர் 47 ஓவரில் 328 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஹென்ரிக்ஸ் சிறப்பாக விளையாடி 108 பந்தில் 110 ரன்கள் சேர்த்தார்.

ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் கிளாசன் 43 பந்தில் 58 ரன்கள் அடித்தாலும், கடைசி ஐந்து வீரர்கள் சரியாக ரன்கள் குவிக்க இயலாமல் போனதால் 45 ஓவரில் 258 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது தென்ஆப்பிரிக்கா ‘ஏ’. இதனால் இந்தியா ‘ஏ’ அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
Tags:    

Similar News