செய்திகள்
நவோமி ஒசாகா

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஒசாகா, ஹாலெப், கிவிட்டோவா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2019-08-28 08:57 GMT   |   Update On 2019-08-28 08:57 GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) தொடக்க சுற்றில் ரஷியாவை சேர்ந்த அனா பிளின்கோவாவை எதிர்கொண்டார். இதில் ஒசாகா 6-4, 6-7 (5-7), 6-2 என்ற செட் கணக்கில் வென்றார்.

4-வது வரிசையில் இருக்கும் ஹிமோனா ஹெலெப் (ருமேனியா) முதல் சுற்றில் 6-3, 3-6, 6-2 என்ற கணக்கில் அமெரிக்காவை சேர்ந்த நிகோலி கிப்சை வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகளான கிவிட்டோவா (செக்குடியரசு), வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஆகியோரை வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

உலகின் இரண்டாம் நிலை வீரரும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 3 முறை வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மில்மேனை எதிர்கொண்டார்.

இதில் நடால் 6-3, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 4-வது வரிசையில் இருக்கும் டொமினிக் தியெம் (ஆஸ்திரியா) தொடக்க சுற்றில் 6-4, 3-6, 6-3, 6-2 என்ற கணக்கில் இத்தாலியை சேர்ந்த பேபினோவை வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் முன்னணி வீரர்களான அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) டிஸ்டிபாஸ் (கிரீஸ்), இஸ்னெர் (அமெரிக்கா), சிலிச் (குரோஷியா) ஆகியோர் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
Tags:    

Similar News