செய்திகள்
ரபேல் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் முன்னேற்றம்

Published On 2019-08-28 03:13 GMT   |   Update On 2019-08-28 03:13 GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
நியூயார்க்:

ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான, அமெரிக்க ஓபன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரரான ரபேல் நடால், ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், 6-3, 6-3, 6-2 என அடுத்தடுத்து மூன்று செட்களையும் கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், உலக தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள ஆஸ்திரிய வீரர் டொமிக் தியமை, தரநிலையில் மிகவும் பின்தங்கியிருக்கும் இத்தாலி வீரர் தாமஸ் பேபியானோ,  6-4, 3-6, 6-3, 6-2 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.
Tags:    

Similar News