செய்திகள்
மிஸ்பா உல் ஹக்

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மிஸ்பா உல் ஹக் விண்ணப்பம்

Published On 2019-08-27 10:39 GMT   |   Update On 2019-08-27 10:39 GMT
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மிஸ்பா உல் ஹக் விண்ணப்பம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து மிக்கி ஆர்தர் நீக்கப்பட்டார்.

இதனால் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிபி அறிவித்தது.  விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாள் நேற்றோடு முடிவடைந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான மிஸ்பா-உல்-ஹக் விண்ணப்பித்துள்ளார். இதனால் கிரிக்கெட் கமிட்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். அவரைத் தவிர வெளிநாட்டுச் சேர்ந்த தலைசிறந்த முன்னாள் வீரர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்பா உல் ஹக் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News