செய்திகள்
பும்ரா

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 16-ல் இருந்து 7-வது இடத்திற்கு முன்னேறினார் பும்ரா

Published On 2019-08-27 09:57 GMT   |   Update On 2019-08-27 09:57 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆண்டிகுவா போட்டியில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்திய பும்ரா ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்திய பும்ரா, 2-வது இன்னிங்சில் 8 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 16-வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் முதல் இடத்திலும், ரபாடா 2-வது இடத்திலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3-வது இடத்திலும் உள்ளனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா 10-வது இடத்தில் உள்ளார்.
Tags:    

Similar News