செய்திகள்
பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப்பெறும் பி.வி.சிந்து

தங்க மங்கை பி.வி. சிந்து பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

Published On 2019-08-27 08:29 GMT   |   Update On 2019-08-27 09:41 GMT
உலக பேட்மிண்டனில் தங்கம் வென்று தங்க மங்கையாக முத்திரை பதித்த பி.வி.சிந்து இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
அமராவதி:

25-வது  உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானின் நோசோமி ஒகுஹராவை எதிர் கொண்டார். ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய பி.வி. சிந்து முதல் சுற்றில் முன்னிலை வகித்தார்.

பின் இறுதியில் 21-7; 21-7 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி பி.வி.சிந்து தங்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை 42 ஆண்டுகளுக்கு பிறகு பி.வி.சிந்து. சாதனை படைத்து, தங்க மங்கையாக முத்திரை பதித்துள்ளார்.

பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.



இந்நிலையில் உலக பேட்மிண்டனில் தங்கம் வென்று முத்திரை பதித்த பி.வி.சிந்து இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் பெருமை, ஒரு தங்கத்தையும் ஏராளமான பெருமையையும் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்த சாம்பியன் பி.வி.சிந்து.

அவரை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News