செய்திகள்
விராட் கோலி கங்குலி

எல்லா பெருமையும் அணிக்கே: கங்குலி சாதனையை முறியடித்த விராட் கோலி சொல்கிறார்

Published On 2019-08-26 10:00 GMT   |   Update On 2019-08-26 10:00 GMT
எல்லா பெருமைகளும் அணியைத்தான் சேரும் என்று கங்குலி சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இதில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றிகை பெற்ற இந்திய அணி கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இதற்கு முன் கங்குலி வெளிநாட்டு மண்ணில் 28 போட்டிகளில் 11-ல் வெற்றிகளை தேடிக்கொடுத்திருந்தார். அந்த சாதனையை தற்போது விராட் கோலி 26 போட்டிகளில் 12-ல் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

எம்எஸ் டோனி தலைமையிலான இந்தியா அணி 30 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது. ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 17 ஆட்டத்தில் 5-ல் வெற்றி பெற்றுள்ளது.



கங்குலி சாதனையை முறியடித்தது குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இந்திய அணியின் கேப்டனாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய ஆசிர்வாதம். என்றாலும், இந்த சாதனை மிகவும் வலிமை வாய்ந்த அணியால் மட்டுமே கிடைத்தது. அணியைத் தவிர்த்து நான் மட்டும் இந்த சாதனையை தன்வசமாக்கிக் கொள்ள நினைக்கவில்லை.

முடிவு எடுப்பது நானாக இருந்தாலும், அதை சிறப்பாக வெளிப்படுத்தி அறுவடை செய்வது அணியின் சக  வீரர்கள்தான். நாங்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறோம். இதனால்தான் வெற்றிகளை குவிக்க இயலுகிறது.’’ என்றார்.
Tags:    

Similar News