செய்திகள்
விராட் கோலி

கங்குலி சாதனையை முறியடித்த கோலி

Published On 2019-08-26 09:15 GMT   |   Update On 2019-08-26 09:15 GMT
வெளிநாட்டில் அதிக வெற்றிகளை தேடி தந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

விராட்கோலி தலைமையில் இந்திய அணி 47 டெஸ்ட் விளையாடி 27-ல் வெற்றி பெற்றது. இதன் மூலம் டோனியின் சாதனையை விராட்கோலி சமன் செய்தார். டோனி தலைமையில் இந்திய அணி 60 டெஸ்டில் 27-ல் வெற்ற பெற்றிருந்தது. டெஸ்டில் அதிக வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டன்களாக கோலி, டோனி உள்ளனர். இன்னும் ஒரு டெஸ்டில் வெற்றி பெற்றால் விராட் கோலி புதிய சாதனை படைப்பார்.



விராட்கோலி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டில் அதிக வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்தது. அவரது கேப்டன் பதவியில் கிடைத்த 12-வது டெஸ்ட் வெற்றியாகும் (26 போட்டி). இதன் மூலம் அவர் கங்குலியின் சாதனையை முறியடித்தார். கங்குலி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டில் 11 டெஸ்டில் (28) வெற்றி பெற்றிருந்தது.
Tags:    

Similar News