செய்திகள்
வார்னர் ஆர்சர்

உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சு: ஜாப்ரா ஆர்சருக்கு டேவிட் வார்னர் பாராட்டு

Published On 2019-08-23 11:29 GMT   |   Update On 2019-08-23 11:29 GMT
ஹெட்டிங்லே டெஸ்டில் ஜாப்ரா ஆர்சரின் பந்து வீச்சு உலகத்தரம் வாய்ந்ததாக இருந்தது என வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஹெட்டிங்லேயில் நேற்று தொடங்கியது. மழையால் ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கியது. மழை பெய்ததால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதை பயன்படுத்தி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜாப்ரா ஆர்சர் புயல் வேகத்தில் பந்து வீசி விக்கெட்டுக்களை சாய்த்தார். அவரது பந்து வீச்சு வேகப்பந்து வீச்சு கண்காட்சி போன்று இருந்தது.

ஆர்சர் 45 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 179 ரன்னில் சுருண்டது. வார்னர் 61 ரன்களும், லாபஸ்சாக்னே 74 ரன்களும் சேர்த்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

போட்டி முடிந்த பின்னர் டேவிட் வார்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது வார்னர் கூறுகையில் ‘‘நம்பமுடியாத வகையில் இங்கிலாந்தின் பந்து வீச்சு இருந்தது. அவர்கள் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தனர்.

புதுப்பந்தில் ஜாப்ரா ஆர்சர் டேல் ஸ்டெயினை போன்று பந்து வீசுகிறார். அவர் சூழ்நிலையை சிறப்பான வகையில் பயன்படுத்த முயற்சி செய்கிறார். ஹெட்டிங்லேயில் அவரது பந்து வீச்சு உலகத்தரம் வாய்ந்ததாக இருந்தது’’ என்றார்.
Tags:    

Similar News