செய்திகள்
இலங்கை நியூசிலாந்து டெஸ்ட்

கொழும்பு டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு- இலங்கை 144-6

Published On 2019-08-23 11:00 GMT   |   Update On 2019-08-23 11:00 GMT
மழையால் கொழும்பு டெஸ்டின் 2-வது நாள் ஆட்டமும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இன்று 30 ஓவர்களே வீசப்பட்டன.
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் கொழும்பில் நேற்று தொடங்கியது. மழை பெய்ததால்  90 ஓவர்களும் வீசப்படவில்லை. 36.3 ஓவர்களே வீசப்பட்டது. இதில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்திருந்தது.  கருணாரத்னே 49 ரன்களுடனும், மேத்யூஸ் ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கருணாரத்னே அரைசதம் அடித்து, 65 ரன்களில் ஆட்டமிழந்தார். மேத்யூஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இலங்கை 66 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. டி சில்வா 32 ரன்களுடனும், பெரேரா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து மழை பெய்ததால் 2-வது நாள் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது.

இரண்டு நாட்கள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில் இலங்கை அணியின் முதல் இன்னிங்சே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போட்டி டிரா ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News