செய்திகள்
மைக் ஹெஸ்சன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக சைமன் காடிச் நியமனம்

Published On 2019-08-23 09:46 GMT   |   Update On 2019-08-23 09:46 GMT
ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் நீக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் டி20 லீக் தொடரில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கேரி கிர்ஸ்டன்.

தற்போது அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் கோச்சராக இருந்த சைமன் காடிச் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



அதேபோல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின்  தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்த நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன் கிரிக்கெட் ஆபரேசன்ஸ் டைரக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News