செய்திகள்
விராட் கோலி ஜேசன் ஹோல்டர்

முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு: அஸ்வின், குல்தீப் யாதவ் இல்லை- ஜடேஜாவுக்கு வாய்ப்பு

Published On 2019-08-22 13:51 GMT   |   Update On 2019-08-22 13:51 GMT
ஆண்டிகுவாவில் நடைபெறும் முதல் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் இன்று நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

டாஸ் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ரன்கள் அதிக அளவில் குவிக்க சாதகமாக இருக்கும். மயாங்க் அகர்வால், கேஎல் ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள்’’ என்றார்.

இந்திய அணியில் அஸ்வின், சகா, குல்தீப் யாதவ், ரோகித் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. மயாங்க் அகர்வால், 2. கேஎல் ராகுல், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ரகானே, 6. ஹனுமா விஹாரி, 7. ரிஷப் பந்த், 8. ஜடேஜா, 9. இசாந்த் சர்மா, 10. முகமது ஷமி, 11. பும்ரா.
Tags:    

Similar News