செய்திகள்
டீம் இந்தியா

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கண்ணோட்டம்

Published On 2019-08-22 08:23 GMT   |   Update On 2019-08-22 08:23 GMT
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியா கடைசி ஏழு டெஸ்ட் தொடர்களை இழந்ததே கிடையாது என்ற சாதனையோடு களம் இறங்குகிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே இதுவரை 23 டெஸ்ட் தொடர் நடைபெற்று உள்ளது. இதில் இந்தியா-9, வெஸ்ட் இண்டீஸ்-12 டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளது. 2 தொடர் சமநிலையில் முடிந்தது.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 11 டெஸ்ட் தொடரில் ஆடி இருக்கிறது. இதில் 4 தொடரை கைப்பற்றி உள்ளது. 7 தொடரை இழந்துள்ளது. இரு அணிகள் இடையே கடைசியாக நடந்த 7 டெஸ்ட் தொடரிலும் இந்தியாவே வெற்றி பெற்றது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றது இல்லை.

இதுவரை நடந்த 96 போட்டியில் இந்தியா 20 டெஸ்டிலும், வெஸ்ட் இண்டீஸ் 30 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 46 போட்டி ‘டிரா’ ஆனது.

அதிக பட்ச - குறைந்த பட்ச ஸ்கோர்


இந்திய அணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராஜ்கோட்டில் 9 விக்கெட் இழப்புக்கு 649 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிகபட்சமாக 588 ரன் குவித்து இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 1959-ம் ஆண்டு டெல்லி மைதானத்தில் 8 விக்கெட் இழந்து 644 ரன் குவித்தது அதிகபட்ச ஸ்கோராகும்.

இந்திய அணி 1987-ல் டெல்லியில் 75 ரன்னில் சுருண்டது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 1997-ல் 81 ரன்னில் சுருண்டு இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 103 ஆகும்.
Tags:    

Similar News