செய்திகள்
வீரேந்திர சேவாக் - ஸ்ரீசாந்த்

ஸ்ரீசாந்துக்கு அட்வைஸ் வழங்கிய வீரேந்திர சேவாக்...

Published On 2019-08-22 04:36 GMT   |   Update On 2019-08-22 04:36 GMT
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தின் தண்டனை காலம் முடிவடைந்தது குறித்து சிறிய அட்வைஸ் ஒன்றை ஸ்ரீசாந்துக்கு சேவாக் வழங்கியுள்ளார்.
புது டெல்லி:

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். கேரளாவைச் சேர்ந்த இவர் ஐபிஎல் தொடரில் விளையாடும்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்து வழக்கை நடத்தி, குற்றமற்றவர் என்று நிரூபித்தார். ஆனால், பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. இதை எதிர்த்து கோர்ட்டில் முறையிட்டார்.

தற்போது உச்சநீதிமன்றத்தால் பிசிசிஐ-க்கு விசாரணை அதிகாரியாக முன்னாள் நீதிபதி டிகே ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஸ்ரீசாந்துக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தடையை 7 வருடங்களாக குறைத்தார்.

ஸ்ரீசாந்துக்கு 2013-ல் இருந்து விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் அவர் மீதான தடை முடிவடைகிறது. அதன்பின் அவர் விளையாடலாம்.

இது குறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில், ‘இப்போது எனக்கு 36 வயதாகிறது. அடுத்த வருடம் 37 ஆகிவிடும். டெஸ்ட் போட்டியில் 87 விக்கெட்டுகள் எடுத்துள்ளேன். 100 எடுக்க வேண்டும் என்பதே என் இலக்கு. டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் திரும்புவேன் என நம்பிக்கை உள்ளது.



விராட் தலைமையில் விளையாட எப்போதும் எனக்கு ஆர்வம் உண்டு’ என கூறினார். ஸ்ரீசாந்துக்கு வழங்கப்பட்ட தண்டனை காலம் குறைக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கூறுகையில், ‘ஸ்ரீசாந்த் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியது மிக்க மகிழ்ச்சி. முதலில் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டியது அவசியம்’ என கூறினார்.

இந்த கருத்துக்கு செய்தியாளர், பாகிஸ்தான் வீரர் ஆமிர் கான் இதேபோல தண்டனை காலம் முடிந்து நேரடியாக சர்வதேச போட்டிகளில் விளையாடியது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சேவாக், ‘பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் எதுவேண்டுமானாலும் நடக்கும்’ என கூறினார்.

Tags:    

Similar News