செய்திகள்
எச்எஸ் பிரனோய் லின் டான்

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: ஜாம்பவான் லின் டானை வீழ்த்தினார் எச்எஸ் பிரனோய்

Published On 2019-08-20 10:31 GMT   |   Update On 2019-08-20 10:31 GMT
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீரர் எச்எஸ் பிரனாய் இரண்டு முறை ஒலிம்பிக் பட்டம் வென்ற லின் டானை வீழ்த்தி அசத்தினார்.
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 2-வது சுற்றில் இந்திய வீரர் எச்எஸ் பிரனோய் இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தையும், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தையும் வென்றவரும் மான லின் டானை எதிர்கொண்டார்.

இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரனோய் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 21-11 என பிரனோய் எளிதாக கைப்பற்றினார்.

இருந்தாலும் 2-வது செட்டை 13-21 என இழந்தார். ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் மிகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரனோய் ஆட்டத்திற்க லின் டானால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் பிரனோய் 3-வது செட்டை 21-7 எனக் கைப்பற்றி லின் டானை வீழ்த்தினார்.

பிரனோய் லின் டானுக்கு எதிர்த்து இதுவரை ஐந்து முறை விளையாடியுள்ளார். இதில் மூன்று முறை பிரனோய் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News