செய்திகள்
இங்கிலாந்து அணியினர்

ஆஷஸ் 3-வது டெஸ்ட் - இங்கிலாந்து அணியில் மாற்றம் இல்லை

Published On 2019-08-20 09:45 GMT   |   Update On 2019-08-20 09:45 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் இன்னும் உடல் தகுதியுடன் இல்லை என்பதால் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
லண்டன்:

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 251 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்தப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் இல்லை. வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் இன்னும் உடல் தகுதியுடன் இல்லை என்பதால் இடம் பெறவில்லை.
Tags:    

Similar News