செய்திகள்
விராட் கோலி

பெரோஸ் ஷா கோட்லா மைதான கேலரிக்கு விராட் கோலி பெயர்: டெல்லி கிரிக்கெட் சங்கம்

Published On 2019-08-19 10:23 GMT   |   Update On 2019-08-19 10:23 GMT
கிரிக்கெட்டில் சாதனைப் படைத்து வரும் விராட் கோலிக்கு பெருமை சேர்க்கும் வகையில் பெரோஸ் ஷா கோட்லா மைதான கேலரிக்கு, அவர் பெயர் சூட்டப்பட இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. டெல்லியைச் சேர்ந்த இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதனைகளை குவித்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் விளாசினார். அத்துடன் பத்து வருடத்தில் 20 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் டெல்லி கிரிக்கெட் சங்கம், பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் உள்ள ஒரு பகுதி கேலரிக்கு அவரது பெயரை சூட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது.



ஏற்கனவே பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் பிஷன் சிங் பேடி, மொகிந்தர் அமர்நாத் ஆகியோர் பெயர்களில் கேலரி ஸ்டேண்ட் உள்ளது. தற்போது விராட் கோலி பெயரும் இணைய இருக்கிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் சுனில் கவாஸ்கர், சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் பெயரில் கேலரி ஸ்டேண்ட் உள்ளது.
Tags:    

Similar News