செய்திகள்
மார்னஸ் லாபஸ்சாக்னே

142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்

Published On 2019-08-19 10:02 GMT   |   Update On 2019-08-19 10:02 GMT
ஸ்மித் காயத்தால் வெளியேறியதால் அவருக்குப் பதிலாக மாற்று வீரராக களமிறங்கி பேட்டிங் செய்த லாபஸ்சேக்னே வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது.

லார்ட்ஸ் மைதானத்தில் நேற்றோடு முடிவடைந்த 2-வது டெஸ்டில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பின்றி டிராவில் முடிந்தது.

இந்த போட்டியின் 4-வது நாள் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும்போது ஆர்சர் வீசிய பவுன்சர் பந்து ஸ்மித்தின் கழுத்து பகுதியை பலமாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்து கீழே சரிந்தார். சிறிது இடைவெளிக்குப்பின் மீண்டும் பேட்டிங் செய்தார்.

ஆனால் ஐந்தாவது நாள் அவர் களம் இறங்கவில்லை. அவர் மூளையளர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவருக்குப் பதிலாக மாற்று வீரர் பேட்டிங் செய்யலாம் என போட்டிக்கான டாக்டரும், ஆஸ்திரேலிய அணி டாக்டரும் பரிந்துரை செய்தனர்.



அதன்படி நேற்று ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும்போது மாற்று வீரரான மார்னஸ் லாபஸ்சேக்னே களம் இறங்கி அரைசதம் அடித்து போட்டி டிராவில் முடிவடைய முக்கிய காரணமாக இருந்தார்.

இதன்மூலம் 142 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக மாற்று வீரர் பேட்டிங் செய்த சாதனையை மார்னஸ் படைத்துள்ளார்.
Tags:    

Similar News