செய்திகள்
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் தடுப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காட்சி

ஆஷஸ் தொடரின் 2-வது ஆட்டம் டிரா

Published On 2019-08-19 06:55 GMT   |   Update On 2019-08-19 06:55 GMT
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

ஆஷஸ் தொடரின் 2-வது ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 258 ரன்களும், ஆஸ்திரேலியா 250 ரன்களும் சேர்த்தன.

பின்னர் 8 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்திருந்தது.

பென் ஸ்டோக்ஸ் 16 ரன்களுடன், ஜாஸ் பட்லர் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இங்கிலாந்து 71 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தபோது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பென் ஸ்டோக்ஸ் 115 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 30 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 266 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் ஆஸ்திரேலியாவுக்கு 267 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஷஸ் தொடரின் 2-வது ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுசாக்னே 59 ரன்களும் ஹெட் 42 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், ஜக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
Tags:    

Similar News