செய்திகள்
இந்திய அணி வீரர்கள்

பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி 181 ரன்னில் சுருண்டது - இஷாந்த், உமேஷ், குல்தீப் அசத்தல்

Published On 2019-08-19 05:12 GMT   |   Update On 2019-08-19 05:12 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் அபார பந்து வீச்சால் அந்த அணி 181 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆன்டிகுவா:

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகள் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம் ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது.

முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 297 ரன் எடுத்து இருந்தது. புஜாரா சதமும், ரோகித்சர்மா 68 ரன்னும், விகாரி 37 ரன்னும், ராகுல் 36 ரன்னும் எடுத்தனர். கார்ட்டர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 297 ரன்னுடன் ஆட்டத்தை முடித்துக்கொண்டு ‘டிக்ளேர்’ செய்தது. இதை தொடர்ந்து வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை விளையாடியது.

இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 56.1 ஓவர்களில் 181 ரன்னில் சுருண்டது.

ஹோட்ஜே அதிக பட்சமாக 51 ரன்னும், கேப்டன் ஹேமில்டன் 33 ரன்னும் எடுத்தனர். இஷார்த் சர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள். முதல் நாள் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சாதித்தனர். 2-வது நாளில் பந்துவீச்சாளர்கள் முத்திரை பதித்தனர்.

116 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 84 ரன் எடுத்து இருந்தது. அகர்வால் 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். விகாரி 48 ரன்னும், கேப்டன் ரகானே 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

இந்திய அணி 200 ரன்கள் முன்னிலை கைவசம் 9 விக்கெட் என்ற வலுவான நிலையில் இருக்கிறது. இந்த பயிற்சி ஆட்டம் இந்திய வீரர்களுக்கு முதல் டெஸ்டில் உத்வேகம் அளிக்கும்.
Tags:    

Similar News