செய்திகள்
பென் ஸ்டோக்ஸ்

லண்டன் லார்ட்ஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 267 ரன்கள் வெற்றி இலக்கு

Published On 2019-08-18 14:58 GMT   |   Update On 2019-08-18 14:58 GMT
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு 267 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.
ஆஷஸ் தொடரின் 2-வது ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 258 ரன்களும், ஆஸ்திரேலியா 250 ரன்களும் சேர்த்தன.

பின்னர் 8 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்திருந்தது.

பென் ஸ்டோக்ஸ் 16 ரன்களுடன், ஜாஸ் பட்லர் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடினார். பட்லர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து பென் ஸ்டோக்ஸ் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். ஐந்தாவது நாள் ஆட்டம் என்பதால் அதிரடியாக ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்ய இங்கிலாந்து திட்டமிட்டது.



பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இங்கிலாந்து 71 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தபோது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பென் ஸ்டோக்ஸ் 115 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 30 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 266 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் ஆஸ்திரேலியாவுக்கு 267 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 48 ஓவர்கள் மட்டுமே இருப்பதால் போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News