செய்திகள்
தமிழ் தலைவாஸ் வீரரை தடுக்கும் பெங்களூரு அணியினர்

புரோ கபடி - தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ்

Published On 2019-08-17 16:54 GMT   |   Update On 2019-08-17 16:54 GMT
சென்னையில் இன்று நடந்த புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ் அணி.
சென்னை:

புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பெங்களூரு புல்ஸ் அணி அபாரமாக ஆடியது. தமிழ் தலைவாஸ் அணியும் கடுமையாக போராடியது.
இறுதியில், பெங்களூரு புல்ஸ் 32 - 21 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் பெங்களூரு புல்ஸ் அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.

பரபரப்பாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்கால் அணி 28-26 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி அணிகள் மோதின. இதில், 30-30 என்ற புள்ளிக் கணக்கில் போட்டி சமனில் முடிந்தது. 
Tags:    

Similar News