செய்திகள்
இலங்கை நியூசிலாந்து டெஸ்ட்

காலே டெஸ்ட்: 177 ரன் முன்னிலையில் வலுவான நிலையில் நியூசிலாந்து

Published On 2019-08-16 15:41 GMT   |   Update On 2019-08-16 15:41 GMT
காலே டெஸ்டில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் சேர்த்துள்ளது.
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ராஸ் டெய்லரின் (86) சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 149 ரன்கள் சேர்த்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை குசால் மெண்டிஸ் (53), மேத்யூஸ் (50), டிக்வெல்லா (61) ஆகியோரின் அரைசதங்களால் 267 ரன்கள் சேர்த்தது.

18 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜீத் ராவல் (4), கேன் வில்லியம்சன் (4), ராஸ் டெய்லர் (3) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து 25 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

டாம் லாதம் 45 ரன்கள் சேர்த்து அணிக்கு ஸ்கோர் உயர்வதற்கு உதவினார். ஹென்ரி நிக்கோல்ஸ் 26 ரன்கள் சேர்த்தார். விக்கெட் கீப்பர் வாட்லிங் சிறப்பாக விளையாடி அணியை முன்னோக்கி அழைத்துச் சென்றா்ர.

இவர் இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை நிலைத்து நிற்க நியூசிலாந்து 3-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் சேர்த்துள்ளது. வாட்லிங் 63 ரன்னுடனும், சோமர்வில் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை நியூசிலாந்து 177 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளைக்கு கூடுதலாக 50 ரன்கள் சேர்த்தால் நியூசிலாந்து வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஏனெனில் காலே ஆடுகளத்தில் நான்காவது மற்றும் கடைசி நாளில் 200 ரன்கள் அடிப்பது எளிதான காரியம் அல்ல.
Tags:    

Similar News