செய்திகள்
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் லக்மல்

காலே டெஸ்ட்: நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 249 ரன்னில் ஆல்அவுட்

Published On 2019-08-15 09:19 GMT   |   Update On 2019-08-15 09:19 GMT
இலங்கைக்கு எதிரான காலே டெஸ்டில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 249 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணி 68 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது. ராஸ் டெய்லர் 86 ரன்களுடனும், மிட்செல் சான்ட்னெர் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஐந்து விக்கெட்டுக்களையும் தனஞ்ஜெயாவே வீழ்த்தினார்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லக்மல் பந்தை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது.



ராஸ் டெய்லர் நேற்றைய 86 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். சான்ட்னெர் 13 ரன்கள் சேர்த்தார். டிரென்ட் போல்ட் 18 ரன்கள் அடிக்க நியூசிலாந்து 83.2 ஓவரில் 249 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது. லக்மல் இன்று காலை நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

பின்னர் இலங்கை முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News