செய்திகள்
விராட் கோலி ஜேசன் ஹோல்டர்

3-வது ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

Published On 2019-08-14 13:09 GMT   |   Update On 2019-08-14 13:09 GMT
டிரினிடாட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட் போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்திய நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரோகித் சர்மா, 2. தவான், 3. விராட் கோலி, 4. ரிஷப் பந்த், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. சாஹல், 7. ஜடேஜா, 8. கேதர் ஜாதவ், 9. கலீல் அகமது, 10. முகமது ஷமி, 11. புவனேஷ்வர் குமார்.
Tags:    

Similar News