செய்திகள்
பி.டி. உஷா

ஆசிய தடகள சங்கத்தின் ஆணைய உறுப்பினராக பி.டி. உஷா நியமனம்

Published On 2019-08-14 12:19 GMT   |   Update On 2019-08-14 12:19 GMT
முன்னாள் தடகள வீராங்கணையான பி.டி. உஷா ஆசிய தடகள சங்கத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புது டெல்லி:

1992 ஒலிம்பிக்கில் குண்டு வீசுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரி அப்துவலீவ். இவரது தலைமையிலான 6 பேர் கொண்ட தடகள ஆணையத்தின் குழுவில் பி.டி. உஷா ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து பி.டி.உஷா கூறுகையில் ‘‘ஆசிய தடகள சங்கத்தின் தடகள ஆணையத்தின் உறுப்பினராக இருப்பது மிகப்பெரிய மரியாதை. எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!’’ என டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

‘பய்யோலி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் பி.டி உஷாவிற்கு 1983 , 1985 ஆண்டுகளில் நாட்டின் உயரிய விருதுகளான  அர்ஜூனா மற்றும் பதமஸ்ரீ விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News