லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக இருக்கும் ஜாப்ரா ஆர்சர், எந்த அற்புதங்களும் நிகழ்த்துவேன் என்று எதிர்பார்க்காதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 251 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நான்கு ஓவர்கள் வீசிய நிலையில் காயத்தால் வெளியேறினார்.
உலகக்கோப்பையில் சிறப்பாக பந்து வீசிய ஜாப்ரா ஆர்சர் காயத்தால் முதல் டெஸ்டில் விளையாடவில்லை. நாளை லார்ட்ஸில் தொடங்கும் 2-வது டெஸ்டில் ஜாப்ரா ஆர்சர் அறிமுகம் ஆகிறார். சராசரியாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் இவர், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் எந்தவித அதிசயத்தையும் எதிர்பார்க்காதீர்கள் என்று ஜாப்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ஜாப்ரா ஆர்சர் கூறுகையில் ‘‘நான் டெஸ்ட் போட்டிக்கான சிகப்பு பந்தில் அதிகமான போட்டியில் விளையாடவில்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. அனால், நான் ஒயிட் பந்தில் விளையாடியதை விட ரெட் பந்தில்தான் அதிகமாக விளையாடியுள்ளேன். எப்படி இருந்தாலும் முன்னுரிமை கொடுக்கும் கிரிக்கெட் இதுவாகும்.