செய்திகள்
கிறிஸ் கெய்ல் பிரைன் லாரா

300-வது போட்டியில் ஏமாற்றத்துடன் பிரைன் லாரா சாதனையை முறியடித்தார் கிறிஸ் கெய்ல்

Published On 2019-08-12 12:20 GMT   |   Update On 2019-08-12 12:20 GMT
300-வது போட்டியில் 11 ரன்கள் அடித்து ஏமாற்றம் அடைந்தாலும் பிரைன் லாராவின் சாதனையை முறியடித்து ஆறுதல் அடைந்தார் கிறிஸ் கெய்ல்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இது கிறிஸ் கெய்லுக்கு 300-வது போட்டியாகும்.

300-வது போட்டியில் கிறிஸ் கெய்ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 11 ரன்கள் அடித்து ஏமாற்றம் அளித்தார்.

என்றாலும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பட்டியலில் பிரைன் லாராவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.



லாரா 299 போட்டியில் 10405 ரன்கள் குவித்துள்ளார். கிறிஸ் கெய்ல் நேற்றைய போட்டியில் 9 ரன்னைத் தொட்டபோது 10406 ரன்கள் அடித்து சாதனையை முறியடித்தார்.
Tags:    

Similar News