செய்திகள்
குருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, தனுஷ்

பாண்டியா பிரதர்சின் ‘ஒய் திஸ் கொலவெறி’..வைரலாகும் பாடல் வீடியோ

Published On 2019-08-12 06:33 GMT   |   Update On 2019-08-12 06:33 GMT
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் குருணல் பாண்டியா இணைந்து பாடும் தனுஷின் கொலவெறி பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி மூன்று டி20 , 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டி தொடர் தொடங்கி இருக்கிறது.

இந்த 3 தொடரிலும் இடம்பெறாத ஹர்திக் பாண்டியா தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான படம்  ‘3’. இதனை ஐஸ்வர்யா தனுஷ் இயக்கினார். இதில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.



இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. குறிப்பாக இதில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலைவெறி’ எனும் பாடல் உலக அளவில் உள்ள ரசிகர்களை கவர்ந்தது. இந்த பாடலை தனுஷ் பாடியிருந்தார். இது யூடியூபில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டது.

இந்த பாடலை இந்திய கிரிக்கெட் வீரர்களான குருணல் பாண்டியா ,ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் சேர்ந்து பாடியுள்ளனர். இருவரும் தங்கள் செல்போன்களை கைகளில் வைத்துக் கொண்டு,  அதில் வரிகளை பார்த்தபடியே பாடுகின்றனர். இந்த வீடியோ நெட்டிசன்கள் பலரால் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News