செய்திகள்
ரொமேலு லூகாக்கு

இன்டர் மிலன் அணிக்கான முதல் போட்டியிலேயே நான்கு கோல் அடித்து ரொமேலு லூகாக்கு அசத்தல்

Published On 2019-08-11 16:03 GMT   |   Update On 2019-08-11 16:03 GMT
மான்செஸ்டர் அணியில் இருந்து இன்டர் மிலன் அணிக்கு மாறிய ரொமேலு லூகாக்கு முதல் ஆட்டத்திலேயே நான்கு கோல் அடித்து அசத்தினார்.
பெல்ஜியம் அணியின் முன்னணி கால்பந்து வீரர் ரொமேலு லூகாக்கு (வயது 26). உலகின் முன்னணி ஸ்டிரைக்கரில் ஒருவராக திகழும் லூகாக்கு 2017-ல் எவர்டன் அணியில் இருந்து மான்செஸ்டர் அணிக்கு மறினார். அந்த அணிக்காக 66 போட்டியில் 28 கோல்கள் அடித்துள்ளார்.

தற்போது மான்செஸ்டரில் இருந்து இத்தாலி அணியான இன்டர் மிலனுக்கு மாறினார். இவருக்கு டிரான்ஸ்வர் பீஸாக இன்டர் மிலன் 73 மில்லியன் வழங்கியது.

இத்தாலியின் முன்னணி லீக்கான செர்ரி ஏ-யில் இன்டர் மிலன் 26-ந்தேதி முதல் ஆட்டத்தில் விளையாடுகிறது.

தற்போது நட்பு ரீதியாலான ஆட்டத்தில் அந்த அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் 4-ம் நிலை அணியான விர்ச்சஸ் பெர்காமோவுக்கு எதிரான ஆட்டத்தில் இன்டர் மிலன் விளையாடியது. இதில் இன்டர் மிலுன் அணிக்காக முதன்முறையாக ரொமேலு லூகாக்கு களம் இறங்கினார்.



முதல் ஆட்டத்திலேயே லூகாக்கு அசத்தினார். அவர் நான்கு கோல் அடித்தார். இந்த ஆட்டத்தில் இன்டர் மிலன் 8-0 என வெற்றி பெற்றது.
Tags:    

Similar News