செய்திகள்
டு பிளிசிஸ்

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணிக்கு டு பிளிசிஸ்தான் கேப்டன்: ஒருநாள் அணி கேப்டன் மாற்றப்படுகிறார்

Published On 2019-08-06 11:51 GMT   |   Update On 2019-08-06 11:51 GMT
தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணிக்கு டு பிளிசிஸ்தான் கேப்டனாக செயல்படுவார் என்ற நிலையில், ஒருநாள் அணிக்கான கேப்டன் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.
இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்கா அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் லீக் சுற்றோடு பரிதாபமாக வெளியேறியது.

இது அந்த அணியின் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 உலகக்கோப்பைக்கு சிறப்பான அணியை தயார் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. இதனால் ஒருநாள் போட்டிக்கான புதிய அணியை கட்டமைக்கும் பணியில் இறங்கியுள்ளது. மூன்று வகை கிரிக்கெட் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக இருக்கும் டு பிளிசிஸ், அணியின் புது கட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு, இந்திய தொடருக்கான  தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக டு பிளிசிஸ் தொடருவார் என்று தெரிவித்துள்ளது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது. இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
Tags:    

Similar News