செய்திகள்
செர்பியா பெண்கள் கைப்பந்து அணி 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

செர்பியா பெண்கள் கைப்பந்து அணி 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

Published On 2019-08-05 11:52 GMT   |   Update On 2019-08-05 11:52 GMT
கைப்பந்து விளையாட்டுகளுக்கான தகுதிச்சுற்றில் பெண்கள் பிரிவில் செர்பியா அணி போலந்து அணியை வீழ்த்தியது, இதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.
வார்சா:

ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான கைப்பந்து விளையாட்டின் தகுதிச்சுற்றுகள் பல்வேறு இடங்களில்  நடைபெற்று வருகின்றன.

இதில் பெண்கள் பிரிவுக்கான சில ஆட்டங்கள் போலந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன. நாட்டின் தலைநகர் வார்சாவில் செர்பியா அணியும் போலந்து அணியும் மோதின. இதில் செர்பியா அணி 21-25, 25-23, 25-16, 25-23 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.

செர்பியா அணி இதற்கு முன்பு தாய்லாந்து மற்றும்  பியுர்டோ ரீகோ அணிகளை வீழ்த்தியிருந்தது. இதே போன்று ஆண்கள் பிரிவுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்குகிறது.
Tags:    

Similar News