செய்திகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்

கும்பலா சுத்துனாலும், ஐயோ யம்மான்னு கத்துனாலும்.. -ஹர்பஜன் அசத்தல்

Published On 2019-08-05 05:49 GMT   |   Update On 2019-08-05 05:49 GMT
உலக நண்பர்கள் தினமான நேற்று, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அசத்தலாக தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
புது டெல்லி:

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உடன் இருக்கும், நம்மை புரிந்து கொள்ளும் நட்பே மிக முக்கியமானது என்பதை இன்றளவும் யாரும் ஏற்றுக்கொள்ளாமல் இல்லை. நம் சுக துக்கங்கள் அனைத்தையும் எவ்வித ஒளிவு மறைவுமின்றி ஓர் உறவிடம் கூறமுடியும் என்றால் அது நட்புதான்.

வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள், பொருளாதார நெருக்கடி என எவ்வளவு கவலை இருந்தாலும், நண்பர்களுடன் சேர்ந்து ஒரு டீ குடிக்கும் நேரம்போதும் நாம் ரிலாக்சாக. அப்படியொரு உறவின் தினம்தான் (ஆகஸ்ட் 4) உலக நண்பர்கள் தினம்.



இந்த நாளில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வார்கள். நண்பர்களுடன் சேர்ந்து வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ், இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி  என பலரும் கலக்கினார்கள். திரை உலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறினார்கள்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், 'நம் நண்பர்களை போல இந்த உலகத்துல பெரிய வரம் எதும் இல்லங்க.ஜல்லிக்கட்டு சம்பவமும் சங்கமமும் நட்பால் தானே சாத்தியம் ஆச்சு.கும்பலா சுத்துனாலும் ஐயோ யம்மான்னு கத்தினாலும் எல்லாம் நட்பு தான். நட்பும் மச்சானும் துணை' என தமிழில் பதிவிட்டு கலக்கினார்.

Tags:    

Similar News