செய்திகள்
சதமடித்த ரோரி பர்ன்ஸ்

ஆஷஸ் டெஸ்டில் ரோரி பர்ன்ஸ் சதம் - இங்கிலாந்து நிதான ஆட்டம்

Published On 2019-08-03 02:24 GMT   |   Update On 2019-08-03 02:24 GMT
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் ரோரி பர்ன்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்துள்ளது.
பர்மிங்காம்:

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 284 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஸ்டீவ் ஸ்மித் பொறுப்புடன் ஆடி சதமடித்து 144 ரன் எடுத்தார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன் எடுத்திருந்தது.

இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய் 10 ரன்னில் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு ரோரி பர்ன்சும், கேப்டன் ஜோ ரூட்டும் கைகோர்த்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர்.



ஜோ ரூட் அரை சதமடித்து 57 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஜோ டென்லி 18 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 5 ரன்னிலும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சில் சிக்கினர்.

விக்கெட்டுக்கள் ஒருபுறம் வீழ்ந்தாலும், நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 267 ரன்கள் சேர்த்துள்ளது. ரோரி பர்ன்ஸ் 125 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News