செய்திகள்
சோயிப் அக்தர்

இந்திய அணியில் இப்படி செய்வது முட்டாள் தனமானது.. -சோயிப் அக்தர்

Published On 2019-08-02 06:25 GMT   |   Update On 2019-08-02 06:25 GMT
இந்திய கிரிக்கெட் அணி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது கருத்தினை கூறியுள்ளார். அது என்ன என்பதை பார்ப்போம்.
இஸ்லாமாபாத்:

உலக கோப்பை அரையிறுதியில் இருந்து இந்தியா வெளியேறியதில் இருந்தே, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இடையே பிளவு நிலவி வருவதாகவும், உலக கோப்பை போட்டி தோல்விக்கு பிறகு இந்த விரிசல் அதிகரித்து இருப்பதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தது.

இதற்கு பதிலளித்த கோலி, 'ரோகித் சர்மாவுக்கும் எனக்கும் இடையே மோதல் நிலவுவதாக பரவிவரும் தகவல் முற்றிலும் பொய்யான செய்தி. எங்கள் இருவருக்கும் இடையே மிகவும் நல்ல உறவு நிடிக்கிறது' என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மீண்டும் விரிசல் குறித்த சந்தேகம் எழுப்பும் வகையில், ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், 'நான் அணிக்காக விளையாட வருவதில்லை. என் நாட்டுக்காக மட்டுமே' என பதிவிட்டிருந்தார். இதற்கிடையே, இந்திய அணியின் குறுகிய ஓவர் போட்டிகளின் கேப்டனாக கோலிக்கு பதில் ரோகித் இருக்க வேண்டும் என்ற சர்ச்சையும் எழுந்தது.



இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில் அவர் கூறியதாவது:

கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் கடந்த 3,4 வருடங்களாக அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அவரது தேவை சிறந்த பயிற்சியாளர், சிறந்த தேர்வுக்குழு.

இவை இரண்டும் சரியாக அமைந்தால் அவர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார். அதே சமயம் ரோகித் சர்மாவும் சிறந்தவர். மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக செயல்படுத்தியவர் அவர்தான். எனினும், கோலியை இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கினால் அது முட்டாள்தனமான முடிவாகவே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.  





Tags:    

Similar News