செய்திகள்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி எந்தெந்த அணிகளுடன் விளையாடுகிறது: முழு விவரம்

Published On 2019-07-31 09:50 GMT   |   Update On 2019-07-31 09:50 GMT
ஐசிசி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா எந்தெந்த அணிகளுக்கு எதிராக விளையாடுகிறது என்பது குறித்து முழு விவரத்தை காணலாம்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. ஐசிசி புதிதாக அறிவிக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் டெஸ்ட் இதுவாகும்.

உலக சாம்பியன்ஷிப் கீழ் இந்தியா வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா எந்தெந்த அணிகளை எதிர்த்து எத்தனை போட்டிகளில் விளையாடுகிறது என்ற விவரம் தற்போது வெளிவந்துள்ளது.

அதன்படி இந்தியா வெளிநாட்டு மண்ணில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தலா இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.



இந்திய மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டியிலும், வங்காள தேசத்திற்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டியிலும், இங்கிலாந்து எதிராக ஐந்து டெஸ்ட் போட்டியிலும் விளையாடுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நாளையில் இருந்து 2021 ஜூன் மாதம் வரை நடைபெறும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல பலப்பரீட்சை நடத்தும்.
Tags:    

Similar News