செய்திகள்
ராபின் சிங்

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராபின் சிங், டாம் மூடி விண்ணப்பம்

Published On 2019-07-31 09:04 GMT   |   Update On 2019-07-31 09:04 GMT
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங், டாம் மூடி ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் தொடரோடு முடிவடைகிறது. இதேபோல் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளர் அருன் பரத், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரது பதவிக்காலமும் முடிகிறது.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் பதவிகளுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தது. முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக்குழு விண்ணப்பங்களை ஆய்வு செய்து சரியான நபர்களை தேர்வு செய்து பிசிசிஐ-க்கும் அனுப்பும்.

இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் தற்போது ராபின் சிங் மற்றும் டாம் மூடி ஆகியோர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.



ராபின் சிங் இந்திய அணியில் ஏற்கனவே பயிற்சியாளராக இருந்துள்ளார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சியாளராக உள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாம் மூடி ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் தலைமை பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News