செய்திகள்
மைக் ஹெஸ்சன்

இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மைக் ஹெஸ்சன் விண்ணப்பம்

Published On 2019-07-26 09:15 GMT   |   Update On 2019-07-26 09:15 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நியூசிலாந்தின் மைக் ஹெஸ்சன் விண்ணப்பிக்க உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. இதேபோல் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளர் அருன் பரத், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரது பதவிக்காலமும் முடிகிறது.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் பதவிகளுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தது. விண்ணப்பிக்க ஜூலை 30-ந்தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி மீண்டும் விண்ணப்பிப்பார் என்று தெரிகிறது. தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர்களை முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான இடைக்கால கமிட்டி தேர்வு செய்கிறது.

இந்த நிலையில் இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மைக் ஹெஸ்சன் பயிற்சி காலத்தில் நியூசிலாந்து அணி 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

அவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனேவும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News