செய்திகள்
ஜான்டி ரோட்ஸ்

இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஜான்டி ரோட்ஸ் விண்ணப்பம்

Published On 2019-07-24 11:47 GMT   |   Update On 2019-07-24 11:47 GMT
தென்ஆப்பிரிக்காவின் பீல்டிங் ஜாம்பவானான ஜான்டி ரோட்ஸ் இந்திய சீனியர் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். #BCCI #JontyRhodes
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்து வீச்சு பயிற்சியாளர் ஆகியோரின் பதவிக்காலம் உலகக்கோப்பையுடன் முடிவடைந்தது. உடனடியாக வெஸ்ட் இண்டீஸ் தொடர் தொடங்க இருப்பதால் மூன்று பேரின் பதவிக்காலம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்தவுடன் மூன்று பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று தெரிவித்த பிசிசிஐ, இதற்கான விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டது.

யார் யார் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவராத நிலையில் இரண்டு நாட்களுக்கு முன், இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆன ஜெயவர்தனே தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளிவந்த வண்ணம் உள்ளன.



இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. விருப்ப மனுவுக்கான கடைசி நாள் ஜூலை 30-ந்தேதியாகும்.

ஜான்டி ரோட்ஸ் 2017-ம் ஆண்டு வரை ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார். உலகின் தலைசிறந்த பீல்டர் என்று போற்றப்படுபவர் ஜான்டி ரோட்ஸ் என்பது குறிப்பிடத்க்கது.
Tags:    

Similar News