செய்திகள்
சச்சின் தெண்டுல்கர்

அவுட்டா? இல்லையா? சச்சினாலேயே தீர்ப்பு கூற இயலாத இந்த வீடியோவில் என்னதான் இருக்கிறது

Published On 2019-07-24 11:07 GMT   |   Update On 2019-07-24 11:07 GMT
டுவிட்டரில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றுக்கு சச்சின் தெண்டுல்கர் பதில் சொல்ல முடியாத நிலையில், ரசிகர்களின் பதில் என்ன என்று கேட்டுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் பவுலர் பந்து வீச இடது கை பேட்ஸ்மேன் அந்த பந்தை எதிர்கொள்கிறார். பந்து ஸ்டம்பை உரசிச் செல்கிறது. அப்போது ஸ்டம்பின் மேல் இருந்த பெய்ல் ஸ்டம்பை விட்டு பறந்தது. அனால் கீழே விழாமல் ஒரு ஸ்டம்ப் மீது குருவி உட்கார்ந்து இருப்பதுபோல் இருந்தது.

பந்து வீச்சாளர் உள்பட பீல்டர்கள் அவுட் கேட்க நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இந்த வீடியோவை சச்சின் தெண்டுல்கருக்கு அவரது நண்பர் அனுப்பியுள்ளார்.

அதை ட்விட்டரில் பதிவிட்ட சச்சின் தெண்டுல்கர் ‘‘என்னுடைய நண்பன் இந்த வீடீயோவை எனக்கு ஷேர் செய்துள்ளார். இதுபோன்ற விஷயம் நடப்பது வழக்கத்திற்கு மாறானது. நீங்கள் நடுவராக இருந்தால், என்ன முடிவு எடுப்பீர்கள்?’’ என்று கேள்வியுடன் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News