செய்திகள்
ஜேம்ஸ் ஆண்டர்சன்

நம்பர் ஒன் இடத்தை பிடிக்க ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆர்வம்

Published On 2019-07-23 09:11 GMT   |   Update On 2019-07-23 09:11 GMT
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் முனைப்பில் உள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இவர் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். அயர்லாந்துக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மோதுகிறது. இந்த டெஸ்ட் நாளை லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 878 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 862 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ரபாடா 851 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

பேட் கம்மின்ஸை விட ஆண்டர்சன் 16 புள்ளிகளே குறைவாக பெற்றுள்ளார். அயர்லாந்துக்கு எதிராக ஐந்து விக்கெட் வீழ்த்தினால் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1-ந்தேதி ஆஷஸ் தொடர் தொடங்குகிறது.

இதில் இரண்டு பேர்களில் யார் சிறப்பாக பந்து வீசுகிறார்களோ, அவர்கள் நம்பர் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. இங்கிலாந்து ஆடுகளங்கள் ஸ்விங் பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆதிக்கம் செலுத்தி நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News