செய்திகள்
ஷுப்மான் கில்

இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது: ஷுப்மான் கில்

Published On 2019-07-23 08:25 GMT   |   Update On 2019-07-23 08:25 GMT
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாதது வருத்தம் அளிக்கிறது என்று இளம் வீரர் ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.
இந்திய ‘ஏ’ அணியில் விளையாடி வரும் இளம் வீரரான ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். வெஸ்ட்இண்டீஸ்க்கு எதிராக இந்திய ‘ஏ’ அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் நான்கு போட்டிகளில் விளையாடிய ஷுப்மான் கில் மூன்று அரைசதங்களுடன் 218 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். அதிகபட்சமாக 77 ரன்கள் அடித்த அவரின் சராசரி 54.5 ஆகும்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை  அறிவிக்கப்பட்டது. இதில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்தார். இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருந்தேன். இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று எதிர்பார்த்தேன். அணியில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், அதைப் பற்றியே சிந்தித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தேர்வாளர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிக ரன்கள் குவிப்பதிலும், எனது ஆட்டத்திறனை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துவேன்.



வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியை 4-1 என வீழ்த்தியது எனக்கும் அணிக்கும் முக்கியமான தொடராக அமைந்தது. தனிப்பட்ட முறையில் மூன்று அரைசதங்களை சதங்களாக மாற்ற விரும்பினேன். ஆனால் இந்த அனுபவத்தில் இருந்து நான் கற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.
Tags:    

Similar News