செய்திகள்
ஜெயவர்தனே

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஜெயவர்தனே விண்ணப்பிக்கிறார்?

Published On 2019-07-22 12:50 GMT   |   Update On 2019-07-22 12:50 GMT
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இலங்கையின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்து வீச்சு பயிற்சியாளர் ஆகியோரின் பதவிக்காலம் உலகக்கோப்பையுடன் முடிவடைந்தது. உடனடியாக வெஸ்ட் இண்டீஸ் தொடர் தொடங்க இருப்பதால் மூன்று பேரின் பதவிக்காலம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்தவுடன் மூன்று பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று தெரிவித்து பிசிசிஐ, இதற்கான விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டது.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜெயவர்தனே தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை இந்திய ஊடகங்களில் வெளியானதாக இலங்கை கிரிக்கெட் வாரிய டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயவர்தனே முதன்முதலாக 2015-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு பேட்டிங் ஆலோசகராக பணியாற்றினார். அதன்பின் 2016-ல் ஐபிஎல் தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரானார். இவரது தலைமையில் மும்பை இந்தியன் 2017 மற்றும் 2019-ல் சாம்பியன் பட்டம் வென்றது.

2017-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் ஜே. அருண் குமார் பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

வேறு யாராவது விண்ணப்பித்துள்ளனரா? என்பது குறித்து விவரம் தெரியவில்லை.
Tags:    

Similar News