செய்திகள்
இந்திய ஏ அணி

வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான தொடரை 4-1 எனக் கைப்பற்றியது இந்தியா ‘ஏ’: ஷுப்மான் கில் தொடர் நாயகன்

Published On 2019-07-22 09:52 GMT   |   Update On 2019-07-22 09:52 GMT
வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா ‘ஏ’ 4-1 என கைப்பற்றியது. ஷுப்மான் கில் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ - இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற  ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா ‘ஏ’ அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. 4-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஐந்தாவது போட்டி உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் தொடக்கத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் அம்ப்ரிஸ் 52 பந்தில் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்னதார். அவர் ஆட்டமிழந்த பின்னர் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியின் விக்கெட்டுக்கள் மளமளவெ சரிய ஆரம்பித்தது.

7-வது வீரராக களம் இறங்கிய ரூதர்போர்டு 65 ரன்களும், 10-வது வீரராக களம் இறங்கிய பியர் ஆட்டமிழக்காமல் 35 ரன்களும் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் ஏ 47.4 ஓவரில் 236 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இந்திய ‘ஏ’ அணி சார்பில் தீபக் சாஹர், சைனி, ராகுல் சாஹர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணியின் கெய்க்வார்ட், ஷுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா ‘ஏ’ அணியின் ஸ்கோர் 11.4 ஓவரில் 110 ரன்னாக இருக்கும்போது ஷுப்மான் கில் 40 பந்தில் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.



அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யரும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கெய்க்வார்டு சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 61 ரன்கள் சேர்கக் இந்தியா ‘ஏ’ 33 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

நான்கு போட்டிகளில் 218 ரன்கள் (10, 62, 77, 69) குவித்த ஷுப்மான் கில் தொடரை நாயகன் விருதை தட்டிச் சென்றார். 
Tags:    

Similar News