செய்திகள்
கோவை கிங்ஸ் அணி வீரர் பந்தை விளாசும் காட்சி.

டிஎன்பிஎல்: காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் வெற்றி

Published On 2019-07-21 17:05 GMT   |   Update On 2019-07-21 18:05 GMT
தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் 4-வது போட்டி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் 4-வது போட்டி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் லைகா கோவை கிங்ஸ் - விபி காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின. லைகா கோவை கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி காஞ்சி அணியின் விஷால், முகிலேஷ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விஷால் 1 ரன்னிலும், முகிலேஷ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். 1 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்ததால் அந்த அணி தத்தளித்தது.

அதன்பின் 3-வது விக்கெட்டுக்கு சுரேஷ் லோகேஷ்வர் - பாபா அபரஜித் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சுரேஷ் லோகேஷ்வர் 31 ரன்னும், பாபா அபரஜித் 28 ரன்களும் சேர்த்தனர். சஞ்சய் யாதவ் 23 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார்.

பிரான்சிஸ் ரோகின்ஸ் 7 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 25 ரன்கள் விளாச காஞ்சி வீரன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. 

பின்னர் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஷாருக்கானும் , அபினவ் முகுந்தும் களம் இறங்கி ஆடினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். ஷாருக்கான் 40 ரன் அடித்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ரஞ்சன் பால் 1 ரன்னில் வெளியேறினார். அதைத் தொடர்ந்த வந்த அனிருத் சீதா ராம், அபினவ் முகுந்துடன் ஜோடி சேர்ந்து ஆடினார். அபினவ் நேர்த்தியாக ஆடி அரை சதம் அடித்தார். 

இறுதியில் கோவை கிங்ஸ் அணி 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 151 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அபினவ் முகுந்த் 70 ரன்னுடனும், அனிருத் சீதா ராம் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
Tags:    

Similar News